10 கடைகளின் ஷட்டரை உடைத்து திருட முயற்சி சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபருக்கு வலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே

1 month ago 3

வேலூர், நவ.27: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நள்ளிரவில் ஓட்டல், டீக்கடை, பேக்கரி உள்பட 10க்கும் மேற்பட்ட கடைகளின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையில் ஓட்டல், டீக்கடை, பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை ஓட்டல், டீக்கடைகளை திறக்க உரிமையாளர்கள், ஊழியர்கள் வந்தனர். அப்போது 10 கடைகளின் ஷட்டர் உடைத்து திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அடுத்தடுத்து கடைகள் உடைக்கப்பட்டிருப்பதால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது.

இதுகுறித்து கடைகளின் உரிமையாளர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து அங்கு கடைகளில் இருந்த கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் சிவப்பு நிற டீசர்ட், டவுசர் அணிந்த ஒரு வாலிபர், ஓட்டல் கடையின் ஷட்டரின் பூட்டுக்களை நீண்ட கம்பியால் வளைத்து உடைத்து, கதவை திறந்து உள்ளே செல்வதும், ஓட்டலில் பல்வேறு இடங்களில் பணம், பொருள் ேதடிபார்ப்பதும், அங்குள்ள பொருளை தூக்கி வீசியதும் அங்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சில கடைகளில் இருந்த கேமராக்கள், அப்பகுதியில் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே வாலிபர், 10 கடைகளின் ஷட்டர் மற்றும் கதவுகளை கம்பியால் வளைத்து உடைத்து உள்ளே செல்வதும் அங்கு பணம், பொருள் எதுவும் கிடைக்காததால் மேம்பாலம் வழியாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது பதிவாகியிருந்தது.

The post 10 கடைகளின் ஷட்டரை உடைத்து திருட முயற்சி சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபருக்கு வலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே appeared first on Dinakaran.

Read Entire Article