10 ஆண்டுகளை நிறைவு செய்த 'கத்தி' திரைப்படம்

3 months ago 16

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'தி கோட்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று 'கத்தி'. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா சதீஷ், உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதுவே லைகா நிறுவனத்தின் முதல் தமிழ் படமாகும். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

2014-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த 'கத்தி' திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும், விவசாயிகளின் வலியை இப்படம் பேசியது. இதனால் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. 

இப்படம் வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகளை கடந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. உலகளவில் செய்த வசூல் மட்டுமே ரூ. 125 கோடி என சொல்லப்படுகிறது. இந்தநிலையில், விஜய்யின் ரசிகர்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Read Entire Article