10 ஆண்டுகளாகியும் ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாதது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

3 months ago 21

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அரசிதழில் அல்லாத பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சத்து 63 ஆயிரத்து 286 பணியிடங்களில், 2 லட்சத்து 61 ஆயிரத்து 233 பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரெயில்வே ஒப்புக்கொண்டுள்ளது. இது மொத்த பணியிடத்தில் 17.85 சதவீதம் அல்லது 6 பணியிடத்துக்கு ஒன்று மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. ஏன் இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை?. அதனை நிரப்புவதற்கு 10 ஆண்டுகள் போதவில்லையா?

ஒரு பக்கம் பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் முறையாக கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை செய்யாததன் காரணமாக ஒவ்வொரு வாரமும் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதுதான் குறைவான அரசு, நிறைவான ஆட்சி என்பதன் பொருளா? எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இது மோசமான மற்றும் திறமையற்ற நிர்வாகமாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article