ஹோண்டா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஷைன் 125 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 123.92 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 10.63 பிஎச்பி பவரையம், 11 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் டெலஸ் கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்கள் இடம் பெற்றுள்ளன.
புதிய விதிகளின்படி, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் இது வெளிவந்துள்ளது. ஸ்பீடோ மீட்டர், டேங்கில் உள்ள எரிபொருளுக்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்லும்போன்ற தகவல்கள் அடங்கிய முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. 6 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.84,493. டிவிஎஸ் ரேடியான், ஹீரோ சூப்பர் ஸ்பிளண்டர் ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஹோண்டா ஷைன் 125 appeared first on Dinakaran.