ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டியோ 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 8.3 எச்பி பவரையம், 10.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஆக்டிவா ஸ்கூட்டரை உள்ளது போன்ற 4.2 அங்குல டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
இதனுடன், ஹோண்டா ரோடு சிங்க் டியூ ஆப் மூலம் ஸ்மார்ட் போனை இணைத்துக் கொண்டு நேவிகேஷன், அழைப்புகளை பார்க்கும் வசதி போன்றவற்றை பெறலாம். டாப் வேரியண்ட் எச் ஸ்மார்ட் எனப்படும் கீலெஸ் என்ட்ரி வசதியுடன் வந்துள்ளது. யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் உட்பட பல அம்சங்கள் உள்ளன. புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில் நுட்பம் இடம் பெற்றுள்ளது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.96,749. டாப் வேரியண்டான எச் ஸ்மார்ட் ரூ.1.02 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post ஹோண்டா டியோ 125 appeared first on Dinakaran.