ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சிபி650 ஆர் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 49 சிசி இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 12,000 ஆர்பிஎம்-ல் 94 பிஎச்பி பவரையும், 9,500 ஆர்பிஎம்-ல் 63 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. எஸ்எஃப்எஃப்-பிபி சஸ்பென்ஷன்கள் இடம் பெற்றுள்ளன.
பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர், டூயல் சானல் ஏபிஎஸ் உள்ளன. இதுதவிர, புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஹோண்டா ரோடு சிங்க் ஆப்ஸ் உடன் இதனை இணைத்து பயன்படுத்தலாம். ஹோண்டா பிக் விங் டீலர்களிடமும், பிக் விங்க் இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
The post ஹோண்டா சிபி650 ஆர் appeared first on Dinakaran.