ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பிளண்டர் எக்ஸ்டெக் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124.7 சிசி 4 ஸ்டிரோக் ஏர் கூல்டு எப்ஐ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 10.39 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஒரு லிட்டருக்கு 63 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. ஷோரூம் விலை டிரம் பிரேக் வேரியண்ட் சுமார் ரூ.86,698, டிஸ்க் பிளேக் சுமார் ரூ.90,698. டிஜிட்டல் கன்சோல், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளன.
இதுபோல் ஹீரோ சூப்பர் ஸ்பிளண்டர் எக்ஸ்டெக் மோட்டார் சைக்கிளில் 124.7 சிசி 4 ஸ்டிரோக் ஏர் கூல்டு ஓஎச்சி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 10.7 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 10.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. புளூடூத் இணைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளன.
ஷோரூம் விலையாக டிரம் பிரேக் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.88,128. டிஸ்க் பிரேக் வேரியண்ட் சுமார் ரூ.92,028 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகன உற்பத்தி விதிமுறைகளுக்கு ஏற்ப, பைக்கிள் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
The post ஹீரோ கிளாமர், சூப்பர் ஸ்பிளண்டர் appeared first on Dinakaran.