ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

3 months ago 27

லெபனான்: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா 60 அடி பதுங்கு குழியில் இருப்பது பற்றிய உளவு தகவல் கிடைத்ததும் உடனடியாக செயல்பட்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லெபனானில் இஸ்ரேல் படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஒரே வாரத்தில் இஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உட்பட 7 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்த ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இருப்பிடம் குறித்த தகவல்களை ஈரான் மற்றும் லெபனானில் உள்ள இஸ்ரேல் உளவு அமைப்பான மோசடோ உளவாளிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் சேகரித்து வந்தது.

இந்நிலையில் பெருட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகத்தில் 60 அடி ஆழத்தில் நஸ்ரல்லா பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து நஸ்ரல்லா மீது உடனடியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் ராணுவப்படையின் போர் விமானங்கள் பைரூட் நோக்கி சீறி பாய்ந்தன. அடுத்தடுத்த குண்டுகள் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகத்தின் மீது வீசப்பட்டன. மொத்தம் 80 குண்டுகள் ஹிஸ்புல்லாவின் சுரங்க அலுவலகத்தை துளைத்து வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் சுரங்க அலுவலகம் மண்ணோடு மண்ணானது. இதில் நஸ்ரல்லா உட்பட ஏராளமானோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம் appeared first on Dinakaran.

Read Entire Article