
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் தேதி இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.
இந்தநிலையில், பாலிவுட் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அயான் முகர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.
ரஜினியின் கூலி படத்தை ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதே வாரத்தில் வார் 2 படம் வெளியாக உள்ளது. வார் 2 மற்றும் கூலி இடையேயான மோதலைத் தவிர்க்க தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ரூ.200 கோடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள வார் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனுடன் மோத விரும்பாமல் கூலி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.