ஹிட்லர், முசோலினி, இடி அமீன் மனநிலையில் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னை நெருக்கடி நிலையை விட மோசம்: வைகோ கடும் கண்டனம்

2 months ago 13

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னை குறித்து குமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இது நெருக்கடி நிலையை விட மிகவும் மோசமானது. கூட்டாட்சி தத்துவம் உள்ள எந்த நாட்டிலும் இதுபோன்ற தேர்தல் நடைமுறை கிடையாது. அமெரிக்காவை போல் அதிபர் பதவியை பெறலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். இந்தியா சமதர்ம பூமியாக இருக்க வேண்டும்.

மதசார்பற்று இருந்தால்தான் ஒற்றுமை ஓங்கும். பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பின்பற்றி வந்த நிலையை தொடர முடியாமல் போய் விடும். ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடி அமீன் ஆகியோரது மனநிலை நமது பிரதமர் மோடியின் உள்ளத்தில் உள்ளது.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்ற நோக்கத்தில் மாநாடு நடத்தினர். எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டியது தான் மதச்சார்பற்ற தன்மையாகும். தமிழக கவர்னர் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற மோசமான கவர்னர் தமிழ்நாடு சரித்திரத்தில் இடம்பெற்றது இல்லை. ஒன்றிய மோடி அரசின் ஏஜென்டாக கவர்னர் செயல்படுகிறார். இந்தியாவில் கவர்னர் பதவியை ஒழிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

The post ஹிட்லர், முசோலினி, இடி அமீன் மனநிலையில் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னை நெருக்கடி நிலையை விட மோசம்: வைகோ கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article