சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் முதலீடுகளுக்கு 15 சதவீத வட்டி தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் ரூ. 4 ஆயிரத்து 620 கோடி வசூலித்து மோசடி செய்ததாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஹிஜாவு நிறுவன இயக்குநர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட 15 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதால் அவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.