ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம்: டிவில்லியர்ஸ்சுக்கு கோஹ்லி வாழ்த்து

3 months ago 18

துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை 2009 முதல் ஹால் ஆஃப் ஃபேம் எனும் பட்டியலில் இணைந்து ஐசிசி வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து வீரர் அலஸ்டர் குக், இந்திய வீராங்கனை நீத்து டேவிட் ஆகியோர் இந்த பட்டியலில் இணைகின்றனர்.

இந்நிலையில் ஹால் ஆப் பேம் வீரர் பட்டியலில் இணைந்துள்ள டிவில்லியர்சுக்கு இந்திய வீரர் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஹால் ஆஃப் ஃபேம் என்பது விளையாட்டில் உங்கள் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.

மக்கள் எப்போதும் உங்கள் திறனைப் பற்றி பேசுகிறார்கள். அது சரிதான். நான் விளையாடியதிலேயே நீங்கள் மிகவும் திறமையான நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர். 2016ல் கொல்கத்தாவில் ஆர்சிபிக்காக நாம் ஒன்றாக பேட்டிங் செய்ததை விட சிறந்த உதாரணம் என் மனதில் இல்லை,என பாராட்டி உள்ளார்.

The post ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம்: டிவில்லியர்ஸ்சுக்கு கோஹ்லி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article