ஹாலிவுட் வெப் தொடரில் நடிகை தபு - டிரெய்லர் வெளியீடு

3 months ago 22

மும்பை,

இந்திய சினிமாவில் இருந்து பல்வேறு நட்சத்திரங்கள் சமீப காலமாக ஹாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றனர். குறிப்பாக பிரியங்கா சோப்ரா, தனுஷ், ஆலியா பட், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளனர்.

அந்த வகையில், ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 'டியூன்: பிராபசி' (Dune: Prophecy) என்ற வெப் தொடரில், 52 வயதான இந்திய நடிகை தபு நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டியூன்: பாகம் ஒன்று' (Dune: Part One) திரைப்படத்தை தழுவி இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

'அராக்கிஸ்'(Arrakis) என்ற கிரகத்தில், பவுல் அட்ரெய்டிஸ் நுழைந்து புனித போரை தொடங்குவதற்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் நிகழ்வுகளை விவரிக்கும் அறிவியல் புனைவு கதையாக 'டியூன்: பிராபசி' வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்த வெப் தொடர் நவம்பர் 17-ந்தேதி ஜியோ சினிமா மற்றும் எச்.பி.ஓ.(HBO) ஓ.டி.டி. தளங்களில் வெளியாக உள்ளது.

இதில் சிஸ்டர் பிரான்செஸ்கா என்ற கதாபாத்திரத்தில் தபு நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட் பிரபலங்கள் எமிலி வாட்சன், ஆலிவியா வில்லியம்ஸ், டிரேவிஸ் பிம்மல் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெப் தொடருக்கான டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் நடிகை தபு நடித்துள்ள காட்சிகள் ஒரு சில வினாடிகளுக்கு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article