ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா

4 months ago 13

ஹார்டி டேவிட்சன் நிறுவனம், பான் அமெரிக்கா 1250 எஸ்டி என்ற அட்வன்சர் டூரர் மோட்டார் சைக்கிளை தனது இந்திய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்த பைக் இந்தியச் சந்தையில் விரைவில் வர உள்ளது உறுதியாகியுள்ளது. இதில் 1252 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 148 பிஎச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்-ல் 127 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. ரோடு, ஸ்போர்ட், ரெயின் மற்றும் விருப்பப்படி மாற்றியமைக்கக் கூடிய 2 டிரைவிங் மோட்கள் உள்ளன. டயரில் காற்றழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் வசதி, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

The post ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா appeared first on Dinakaran.

Read Entire Article