ஹார்லி டேவிட்சன் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டிரீட் பாப் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் மில்வாக்கி எய்ட் 117 கிளாசிக் 1,923 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 91 எச்பி பவரையும், 156 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதன் விலை விவரம் வெளியிடப்படவில்லை.
இதுதவிர, நடப்பு ஆண்டுக்கான புதிய மேம்படுத்தப்பட்ட சிவிஓ மாடல்களான சிவிஓ ஸ்டிரீட் கிளைட் மற்றும் சிவிஓ ரோடு கிளைட் ஆகிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்ய உள்ளது. சிவிஓ ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களில் 1,983 சிசி மில்வாக்கி எய்ட் விவிடி 121 இன்ஜின் இடம் பெற்றிருக்கும் எனவும், அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 188 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
The post ஹார்லி டேவிட்சன் appeared first on Dinakaran.