ஹரியானாவில் 3வது முறை வெற்றி பெற்ற பாஜக குறித்து மோடி பெருமிதம்

3 months ago 23
காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வாய்ப்பு தரவில்லை என்று கூறிய பிரதமர் மோடி ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக வாக்காளர்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதே போல் பல மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை மோடி சுட்டிக் காட்டினார். ஹரியானா தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தலைமையகத்தில் பேசிய பிரதமர் மோடி, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் கூட்டணிக் கட்சிகளை விழுங்கியதாகவும் காங்கிரசால் கூட்டணிக்கட்சிகள் பின்னடைவை சந்தித்ததாகவும்  விமர்சித்தார். மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும் கூறிய மோடி, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகளிலும் பாஜகவுக்கு பெரும் ஊக்கம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்
Read Entire Article