ஹரியானா தேர்தல் தோல்வி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

3 months ago 17

டெல்லி: ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து டெல்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அக். 8 ஆம் தேதி நடைபெற்றதில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் -37, இந்திய தேசிய லோக் தளம் -2, சுயேச்சைகள் -3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

இதையடுத்து ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக, ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஹரியானா தேர்தல் தோல்வி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article