'ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல' - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

6 months ago 25

டேராடூன்,

உத்தரகாண்ட் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தரபிரதேச எல்லை அருகே ஹரித்துவாரைச் சுற்றியுள்ள சுமார் 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்படி நதி நீர் 'ஏ'(A) முதல் 'ஈ'(E) வரை 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதாவது 'ஏ' என்றால் மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம். அதே சமயம் 'ஈ' என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் 'பி'(B) வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article