'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்

5 hours ago 1

சென்னை,

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இப்படம் கடந்த மே மாதம் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்னர், இப்படம் வருகிற ஜூலை 24-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 3-ந் தேதி காலை 11.10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

This is not just the trailer update…⁰It's a declaration of the hysteria that's going to take over the next 25 days #HHVMTrailer on July 3rd.#HariHaraVeeraMallu pic.twitter.com/ECxV1qGWl7

— Hari Hara Veera Mallu (@HHVMFilm) June 28, 2025
Read Entire Article