ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு வசதியாக சறுக்குப்பாதை

3 months ago 28

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மாற்றுத்திறனாளி பக்தர்கள் வந்து செல்ல கோவிலில் மூன்று சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில் அதை பயன்படுத்தி கோயிலுக்குள் செல்வதில் சிரமம் உள்ளது. எனவே மாற்றுத்திறனாளி பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆண்டாள் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.5.50 லட்சம் செலவில் சறுக்குப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டாள் கோயில் கொடிமரம் அருகே, நந்தவனம் மற்றும் பெரியாழ்வார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்பட ஏழு இடங்களில் மாற்றத்திறனாளிகள் செல்லும் சறுக்குப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சறுக்குப்பாதை பணிகள் முடிவடைந்தவுடன் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article