ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

3 hours ago 2

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு (50). இவர், நேற்று நகரில் கூனங்குளம் தெருவில் உள்ள தனது கிளினிக்கில் இருந்தார். அப்போது வந்த வாலிபர் ஒருவர், அவரை கத்தியால் குத்தினார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டி தெருவைச் சேர்ந்த கணேசபாண்டி (32) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎம்ஏ மருத்துவர் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், பல் மருத்துவர் சங்கம் ஆகியவை சார்பில் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவர் சுகுமாரன் தலைமை வகித்தார். இதில், கலந்து கொண்டவர்கள் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காளிராஜ் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article