ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம்...வெளியான முக்கிய தகவல்

3 hours ago 1

மும்பை,

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சமீபகாலமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, ஸ்ரீலீலா, கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

சமீபத்தில், இவர் நடிகர் இப்ராகிம் அலி கானுடன் மும்பையில் காணப்பட்டார். இது அவரது பாலிவுட் அறிமுகம் பற்றிய வியூகங்களை மேலும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலீலாவுக்கு தற்போது பல படங்கள் வரிசையில் உள்ளன. அதன்படு, ராபின்ஹுட் அடுத்ததாக வரவுள்ள அவரது படமாகும். மேலும், அவர் பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்', ரவி தேஜாவுடன் 'மாஸ் ஜாதரா' மற்றும் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் 'பராசக்தி' அவர் தமிழில் அறிமுகமாகும் படமாகும்.

Read Entire Article