திருச்சி, ஏப். 25: ஸ்ரீரங்கம் மேலூர் அருகே மாடு திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் ஏப்.19ம் தேதி அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். ஓய்வு எடுத்துவிட்டு திரும்பியபோது. அவரது 11 மாடுகளில் 3 மாடுகள் மற்றும் 1 கண்று காணாமல் போனது தெரிந்தது. இதேபோல் ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் ரமேஷ் (37), ஏப்.18ம் தேதி அந்த பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
மாடுகளை அங்குவிட்டு வேறு வேலைக்கு சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது 1 மாடு காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ் அளித்த புகாரின் போில் ஸ்ரீரங்கம் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து திருவள்ளூர், மாவட்டம், கோசவன்பட்டியை சேர்ந்த முகுந்தன் (27) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
The post ஸ்ரீரங்கம் மேலூர் அருகே மாடு திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.