ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

2 months ago 15

சென்னை: பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற, இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பார்வையற்ற மற்றும் வாய் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் போன் பெற தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், யுடிஐடி அட்டை, ஆதார் அட்டை மற்றும் இளங்கலை கல்வி, முதுகலைக்கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்கள் அதற்கான உரிய சான்றுகளுடன் ஒருவார காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

The post ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article