ஜெட்டா,
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய செங்கடல் திரைப்பட விழா வரும் 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்பைடர் மேன் நடிகர் ஆண்ட்ரூ கார்பீல்டுடன் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இப்புகைப்படம் வைரலானநிலையில், ரசிகர்கள் பல்வேறுவிதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தி அமேசிங் ஸ்பைடர் மேன் படத்தில் நடித்து பிரபலமான ஆண்ட்ரூ கார்பீல்டு, தற்போது வீ லிவ் இன் டைம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜான் குரோலி மற்றும் நிக் பெய்ன் இயக்கிய இப்படத்தில் ப்ளோரன்ஸ் பக் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மறுபுறம், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஸ்ட்ரீ 2. இப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.