"ஸ்பைடர் மேன்" 4வது பாகத்தில் இணையும் "ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்" பட நடிகை

20 hours ago 1

'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்' இணையத் தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை, ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் புதிய பாகத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்' இணையத் தொடர் மூலம் பிரபலமான அமெரிக்க நடிகை ஸேடி சின்க், ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் 4வது பாகத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே ஸ்பைடர் மேனாக அறியப்படும் நடிகர் டாம் ஹோலண்டின் நடிப்பில் சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய பாகத்தை டெஸ்டின் டேனியல் க்ரெட்டான் இயக்குகிறார். மேலும், ஸ்பைடர் மேன் திரைப்படங்களின் கதாநாயகியான புகழ்பெற்ற 'எம்ஜே' கதாப்பாத்திரத்தில் நடிகை ஸெண்டையா மீண்டும் தொடரவுள்ள நிலையில், ஸேடி சின்க் இணைவது குறித்து சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்களின் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் இணையத் தொடரின் 'மேக்ஸ்' என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் அறியப்படும் நடிகை ஸேடி சின்க்கின் திரைப்படமான 'ஓ'தெஸ்ஸா வருகின்ற 20ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article