ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

2 months ago 10

வாஷிங்டன் : ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்தது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக் கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும். இஸ்ரோவின் ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 4,100 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை மட்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜிசாட் N2 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசாட் N2 செயற்கைக் கோள் வர்த்தக முறையில் விண்ணில் செலுத்தப்படுவதால் இந்த திட்டத்திற்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை செலவு என்றும் இதன் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

The post ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article