ஸ்பெயினில் தஞ்சமடைவதற்காக பயணித்ததில், 2024ஆம் ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்கு அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து பயணித்த மக்கள், ஸ்பெயினின் கேனரி தீவை அடையும் முன்பு இறந்துள்ளதாக, புலம்பெயர் மக்களுக்கான உதவிக்குழு ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 27ஆம் தேதி மட்டும், 6 படகில், 300 பேர் ஸ்பெயினில் தஞ்சமடைந்ததாகவும், 2024ஆம் ஆண்டில் மட்டும், 41 ஆயிரத்து 425 அகதிகள் வந்துள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது.