மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்..
இவர் தற்போது ராம் சரணுடன் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி வசூல் சதனை படைத்த ஸ்ட்ரீ 2 படத்தை தயாரித்த மடாக் பிலிம்ஸின் அடுத்த படத்தில் நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மடாக் பிலிம்ஸ் ஹாரர் காமெடி யுனிவெர்சின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறது. அதன்படி, இதன் அடுத்த படம் சக்தி ஷாலினி. இப்படம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்காதநிலையில், வெளியான தகவல் உணமையாகும் பட்சத்தில் மடாக் பிலிம்ஸுடன் கியாரா அத்வானி இணையும் முதல் படமாக இது இருக்கும். மடாக் பிலிம்ஸின் காமெடி ஹாரர் யுனிவெர்சில் கியாரா அத்வானியை பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.