பணி: புரேபஷனரி ஆபீசர்:
மொத்த காலியிடங்கள்: 541.
சம்பளம்: ரூ.48,480/-.
வயது: 01.04. 2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, முதல்நிலை தேர்வு (Preliminary) மற்றும் பிரதான தேர்வு (Main) என இரு கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும். முதல்நிலை தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மையங்களில் நடைபெறும். பிரதான தேர்வு சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி ஆகிய மையங்களில் நடைபெறும்.கட்டணம்: ரூ.750/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.
www.bank.sbi/web/careers/current opening என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2025.
The post ஸ்டேட் வங்கியில் 541 புரபஷனரி ஆபீசர்கள் appeared first on Dinakaran.