ஸ்டிரைக்கால் வெளிமாநில வியாபாரிகள் ‘ஆப்சென்ட்’:ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

6 hours ago 2

ஒட்டன்சத்திரம்: பொது வேலைநிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டது.ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தின. தமிழகத்தை பொறுத்தவரை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் அனைத்து பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ளூர் வெளிமாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா கர்நாடகா வியாபாரிகளும் வந்து காய்கறிகள் வாங்கி செல்வர். குறிப்பாக கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தால் நேற்று கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய வரவில்லை. விவசாயிகளும் தங்கள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராமல் தோட்டங்களில் இருப்பு வைத்துக் கொண்டனர். இதனால் நேற்று மட்டும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

 

The post ஸ்டிரைக்கால் வெளிமாநில வியாபாரிகள் ‘ஆப்சென்ட்’:ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article