
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின்.தற்போது இவர் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.
இயக்குனர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் கடந்த மே 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் லால், கீதா கைலாசம், பிரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 'ஸ்டார்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், வசூல் ரீதியாக வெற்றியை கண்டது.
இந்தநிலையில், தற்போது 'பிளடி பெக்கர்' படத்தின் ரிலீஸையொட்டி அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'ஸ்டார்' படத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன். ஆனால், படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இறுதியில் நான் சொன்னது போலவே நடந்தது" என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
அதாவது, "படத்தின் கதை கேட்கும்போது சரியாக இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் படம் பண்ணேன். இறுதியில் படம் கொஞ்சம் நீண்டுகொண்டே செல்வதாக தோன்றியது. படம் பார்த்துவிட்டு, படம் நன்றாக உள்ளது. அதற்கான காட்சிகளும் நிறைய உள்ளது. ஆனால், சில காட்சிகள் படத்திலிருந்து விலகி நிற்கின்றன. அது நன்றாக உள்ள காட்சிகளையும் சேர்த்து பாதிக்கிறது என்று கூறினேன்' என அதில் கூறியுள்ளார்.
