"ஸ்குவிட் கேம்" தொடரின் கடைசி பாகம் வெளியானது!

1 day ago 3

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் நேற்று நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த 'ஸ்குவிட் கேம் சீசன் 3' தான் இந்த தொடரின் கடைசி பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. 6 எபிசோட்களைக் கொண்ட இந்த சீசன், அடுத்தடுத்து திருப்பங்களால் நிறைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article