
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்கிழக்கு ரெயில்வே, ஓங்கோல் மற்றும் நெல்லூரில் கூடுதல் நிறுத்தங்களுடன் கூடிய சிறப்பு ரெயில்களின் சேவைகளை நீட்டிக்க அறிவித்துள்ளது:
ரெயில் எண்.02841/02842 ஷாலிமார் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ஷாலிமார் சிறப்பு ரெயில்கள்:
திங்கட்கிழமைகளில் ஷாலிமாரில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை அடையும் ரெயில் எண்.02841 ஷாலிமார் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் சேவை, மே 19, 26, ஜூன் 02, 09, 16, 23 மற்றும் 30, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
புதன்கிழமைகளில் காலை 4.30 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 11.20 மணிக்கு ஷாலிமாரை அடையும் ரயில் எண்.02842 ஷாலிமார் - ஷாலிமார் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படும். மே 21, 28, ஜூன் 04, 11, 18, 25 மற்றும் ஜூலை 02, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.