வைரலோ வைரல்

3 months ago 25

பாயும் சிறுமி பாயல்!

ஷீத்தல் தேவி பிறந்த காஷ்மீரின் கிஸ்துவார் மாவட்டத்தில், இன்னொரு 13 வயது சிறுமியும் வில்வித்தை பயிற்சியில் களமிறங்கியிருப்பது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சாதிக்க எதுவும் தடையில்லை என நிரூபித்துத் தங்க மங்கையாக திகழ்பவர் ஷீத்தல். பாரிஸில் நடந்த பாராலிம்பிக் தொடரில், வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சார்பில் 17 வயது சிறுமி ஷீத்தல் தேவி கலந்து கொண்டார். பிறந்தது முதலே இரு கைகளை இழந்த அவர் தனது கால்கள் மூலமாக வில்வித்தை போட்டியில் சிறப்பாக விளையாடி, பலரின் மனதை இவர் வென்றது மட்டுமின்றி பல போட்டிகளில் தங்கம் உட்பட பல பதக்கங்களும் வென்றவர். ஒரு பெண் தன் தடையை மீறி முன்னேறும் போது அவர் வழியிலேயே ஆயிரம் பெண்கள் வருவார்கள். அதற்கு சான்றாக இதோ ஷீத்தலைப் பின்பற்றி அவர் ஊரிலேயே பாயல் நாக் என்ற சிறுமி வில்வித்தையில் வீரம் காட்டுகிறார். பாயல் நாக் கைகள் மற்றும் கால்களை இழந்தவர். ஷீத்தல் தேவி போலவே இவரும், அம்பை எய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு, குல்தீப் வித்வான் பயிற்சி அளித்து வருகிறார். இவர் தான் ஷீத்தல் தேவிக்கும் பயிற்சி அளித்தவர். சிறுமி பாயல், வில்வித்தை பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

நானே பாவமா இருக்கேன்டா!

சீசனுக்கு ஒரு சுட்டிக் குழந்தை செய்யும் குறும்பு, அல்லது மழலை மொழியில் அவர்கள் பேசுவது, அழுவது என எதுவானாலும் வைரலாகி டிரெண்டிங்கில் இருப்பது சகஜம். ‘எங்க அம்மா இருக்கே, எங்க அம்மா!’ என கொரோனா காலத்தில் புலம்பிக் கொண்டே வீட்டு வேலை செய்த சிறுமி, ‘அப்போ எனக்குப் பசிக்கும்ல’, ‘குணமா வாயில சொல்லணும்’, ‘எப்புட்ற’, ‘எம்மா எங்கம்மா போன?’என இப்படி இவர்களின் வார்த்தைகளும்,மீம்கள், ஸ்டிக்கர்களில் கலை கட்டுவதும் வழக்கம். இதோ அப்படித்தான் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் பல பள்ளிகள் குழந்தைகளுக்கு நிறைய வீட்டுப் பாடங்கள் கொடுத்துள்ளனர். இதனை வைத்து ஒரு சிறுமி புலம்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘உன் ஹோம் வொர்க் நீதானே எழுதணும், இரு மிஸ் கிட்ட சொல்றேன்’ என வீட்டார் சொல்ல, அழுதுகொண்டே ‘டேய் நானே பாவமா இருக்கேன்டா, என்னைய பார்த்தா பாவமா இல்லையா?’ என அழுதுகொண்டே கேட்கும் இந்தச் சிறுமிதான் தற்போது இணையத்தில் டிரெண்ட். பாவமாதான் இருக்குப்பா!

The post வைரலோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article