வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே

3 hours ago 3

சென்னை,

மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில், மதுரையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு (12636), பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். அதாவது 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும். அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும். இரு மார்க்கமும் பகல் நேரத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருவதால் தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், (12636) டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 11 வரை மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

* மேல்மருவத்தூரில் ரெயில் நின்று செல்லும் நேரம்: மதியம் 12.23 - 12.25

 

Temporary Stoppage of Vaigai Express at Melmaruvathur Vaigai Express will have a two-minute stoppage at Melmaruvathur Station for the Irumudi/Thaipoosam Festival.#FestivalSpecial #VaigaiExpress #southernrailway pic.twitter.com/rvBAI1UjOO

— Southern Railway (@GMSRailway) December 19, 2024
Read Entire Article