பீமனிடம் திருவிளையாடல் நிகழ்த்திய அனுமன்

2 months ago 19

ஒரு முறை சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று திரவுபதியின் மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனை திரவுபதிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள். அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலை சாரலை அடைந்து. அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு வயோதிக தோற்றத்தில படுத்துக்கிடந்தார்.

அனுமனின் திருவிளையாடலை அறியாத பீமன், வழியில் வாலை நீட்டியவாறு பாதையில் படுத்திருந்த அனுமனிடம் வாலை நகர்த்துமாறு கூறினான். அனுமன் 'முடியாது' என்று கூற, இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. முடிவில் மாருதி பீமனைப் பார்த்து "வாலை இழுத்து அப்பால் தள்ளிவிட்டுச் செல்" என்றார்.

பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக் கூட முடியவில்லை. பீமன் பிரம்மித்தான், 'பீமா.. நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்" என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவனை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரை காட்டினார். பீமன் அவரை பணிந்து சவுகந்திகா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்.

Read Entire Article