வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கு: மதுரை ஐகோர்ட்டு கிளை

7 months ago 24

மதுரை,

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரிய வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி மதுரை வழக்கறிஞர் மணிபாரதி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வைகை வருசநாட்டில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. இதில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது, மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன.

இந்தநிலையில் ஆற்றின் நிலையை கருத்தில் கொண்டு தேனி முதல் ராமநாதபுரம் வரை கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு தேவை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் நீர்வளத்துறை, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் 5 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article