
திருவனந்தபுரம்,
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மாலையணிந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கார்த்திகை மாதம் தான் அதிக பக்தர்கள் சென்று திரும்புவார்கள் என்ற போதிலும் மற்ற காலங்களிலும் அங்குக் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை முதல் வைகாசி மாத பூஜைகள் நடக்கிறது. இதை ஒட்டி இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை காண்பிக்கிறார். இன்று சிறப்பு பூகைள் நடக்காது. நாளை முதல் கணபதி ஹோமம், உஷ பூஜை உட்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமய பூஜை, படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கும்.
வரும் 19ம் தேதி பூஜைகள் முடிக்கப்பட்டு நடை சாத்தப்படுகிறது.