வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும், தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கும் ரொக்கப்பரிசுகள் - அமைச்சர் அறிவிப்பு

3 hours ago 3

தமிழக சட்டசபையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்குபவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம், 2025-26ம் ஆண்டிலும் 55 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும், நவீன வேளாண் கருவிகள், நவீன சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து கடைப்பிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.2.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article