
சென்னை,
நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 15-ந்தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி வேளாண்மை பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அதில், "தமிழ்நாட்டில் சகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கேழ்வரகு உற்பத்தில் முதலிடம், கரும்பு உற்பத்தியில் 2-வது இடம், நிலக்கடை உற்பத்தியில் 3-வது இடம் வகிக்கிறது. வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும். உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்கள் பாதுகாப்பார்கள்
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு. தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்
1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு" என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கூறினார்.