வேளாண் தொழில்நுட்ப வணிக மாநாடு துவங்கியது

1 month ago 4

 

கோவை, பிப். 10: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உயிர்தொழில்நுட்ப மருத்துவ மையத்தில் வேளாண் தொழில்நுட்ப வணிக மாநாடு துவங்கி நடந்து வருகிறது. இதில், 13 வேளாண் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் உரையாற்றுகின்றனர். துவக்க விழாவில், உயிர்தொழில்நுட்ப மகத்துவ மைய திட்ட இயக்குனர் மோகன்குமார் வரவேற்றார். உயிர்தொழில்நுட்ப மருத்துவ மைய இயக்குனர் செந்தில் தலைமை உரையாற்றினார்.

கருத்தரங்கின் முதல் நிகழ்வாக ஏரோ360 நிறுவனத்தின் உதவி துணைத்தலைவர் மகரிஷ் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளின் பயன்பாடுகளை விளக்கினார். நவீன விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் டிரோன் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்தும், விவசாயத்தில் டிரோன்களின் முக்கியத்துவம் குறித்தும், மற்ற துறைகளில் இந்த டிரோன்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? என்பதையும் அவர் விளக்கினார்.

இந்த மாநாடு வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்பு, சந்தை விலை முன்னறிவிப்பு, பயிர் நோய் கண்டறிதல் மற்றும் பூச்சிக்கொல்லி பரிந்துரை மூலம் விவசாயிகளின் மகசூல் இழப்பு போன்ற பிரச்னைகள், ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கான புதிய யுத்திகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. கருத்தரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post வேளாண் தொழில்நுட்ப வணிக மாநாடு துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article