வேளாங்கண்ணியில் வாக்காளர் சேர்க்கை முகாம்

3 months ago 13

 

நாகப்பட்டினம்,நவ.18: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் சேர்க்கை முகாமை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆய்வு செய்தார். 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம் உள்ளிட்டவற்றை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நேற்று முன்தினம்(16ம் தேதி), நேற்று(17ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் நடந்த ஆய்வில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே போல் கீழையூர் கிழக்கு ஒன்றிய பகுதியில் நடந்த முகாமில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சங்கர்,கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலாளர் மரியசார்லஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

The post வேளாங்கண்ணியில் வாக்காளர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article