சென்னை,
இணையதளங்கள் (Websites), செயலிகள் (Apps), அலைபேசி கருவிகள் (Mobile Devices), சமூக ஊடகங்கள் (Social Media), தேடுபொறிகள் (Search Engines), டிஜிட்டல் செயல்பாடுகள் (Digital Means), ஆகிவற்றைப் பயன்படுத்தி, பொருட்கள் (Products) மற்றும் சேவைகளை (Services) சந்தைப்படுத்தி, விற்பனை பெருக்கம் செய்யும் முறையை "டிஜிட்டல் மார்க்கெட்டிங்" (Digital Marketing) என அழைப்பார்கள்.
"டிஜிட்டல் மார்க்கெட்டிங்"(Digital Marketing) என்பது "மரபுவழி சந்தைப்படுத்துதல்" (Traditional Marketing) முறையிலுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு, புதிதாக நுகர்வோர் நடவடிக்கைகளை (Consumer Behaviour) புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களை அணுகும்முறையை உருவாக்கிக்கொள்வதைக் குறிக்கிறது.
1990ஆம் ஆண்டு இணையதளம் (Websites) அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த "டிஜிட்டல் மார்க்கெட்டிங்" வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியது.
ஒரு நிறுவனத்தில் "சந்தைப்படுத்துதல்"(Marketing) என்பது பல்வேறு நுணுக்கங்களை உள்ளடக்கியது ஆகும். அதுமட்டுமல்லாமல், ஒரு நிறுவனம் ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் பொருட்களின் விற்பனை மற்றும் சேவைகளை அதிகப்படுத்தவும், அதன்மூலம் சந்தையிலுள்ள தங்களின் பங்கை (Market Share) அதிகரிக்கவும், நாள்தோறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய தொழில்நுட்பங்கள்மூலம் தங்களது "சந்தைப்படுத்துதல்" (Marketing Strategy) யுக்திகளை நிறுவனங்கள் மாற்றிக்கொண்டே வருகின்றன.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகப்படுத்தப்பட்டபோது "இ-மெயில்"மட்டுமே சந்தைப்படுத்துதலுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் "நெட்ஸ்கேப்"(Netscap) என்னும் தேடுபொறியை பயன்படுத்தி டிஜிட்டல் மார்க்கெட்டிங் வளர்ந்தது. தற்போது சமூகதளங்கள் (Social Platforms) வளர்ந்ததினால் "பேஸ்புக்"(Facebook) அதிகமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யப் பயன்படுகிறது. ஏனென்றால், பேஸ்புக்மூலம் நிறுவனங்கள் பயனாளிகளின் தரவுகளை (User Data) அறிந்துகொள்ளவும், அவர்களுக்குத் தேவையான தகவல்களை குறிப்பிட்ட நுகர்வோருக்கு தெரிவிக்கவும் இயலும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் 76 சதவீத இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை "ஸ்மார்ட்போன்" பயன்படுத்தி வாங்கிக்கொள்கிறார்கள்" என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. டி.வி. மற்றும் அச்சு ஊடக விளம்பரங்களைப்போல் இல்லாமல் நுகர்வோரோடு நெருங்கிய தொடர்புகொள்ள பேரூதவியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் நன்மைகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பல்வேறு நன்மைகளை தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள்தோறும் வழங்கி வருகிறது. மிகச்சிறிய நிறுவனம்முதல், மிகப்பெரிய நிறுவனம்வரை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் அமைந்துள்ளது.
நுகர்வோரிடம் நேரடித்தொடார்பை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்கள், இ-மெயில் மற்றும் சில தளங்கள்மூலம் செயல்படுகிறது. இதனால் நுகர்வோர்களிடம் வணிக - தொழில் நிறுவனங்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த வழிகளை செய்கிறது. உலக அளவிலுள்ள நுகர்வோரை சில நிமிடங்களுக்குள் சென்றடையும் வசதி வாய்ப்புகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் உள்ளது.
மிகக்குறைந்த செலவில் அதிகளவு நுகர்வோர்களிடம் தொடர்பை ஏற்படுத்தி, அதன்மூலம் வணிகத்தைப் பெருக்குவதற்கு அடிப்படையாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் அமைந்துள்ளது. மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட தகவல்களை தனிநபர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றி, அதன்மூலம் புதிய அனுபவத்தை நுகர்வோர்களுக்கு ஏற்படுத்தி அதிக நுகர்வோரை வணிக தொழில் நிறுவனங்களுக்கு உருவாக்க இது உதவுகிறது.
வணிக போட்டியாளார்களின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளவும், அதற்கு ஏற்றவாறு சந்தைப்படுத்துதல் யுக்திகளை மாற்றிக்கொள்ளவும், நுகர்வோர்கள் பற்றிய அனைத்து விவரங்களை சேகரித்து, சேமித்து வைத்துக்கொள்ளவும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவியாக அமைவதால் விற்பனையை அதிகரிக்க இது பக்கபலமாக அமைகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம்.
அவை:-
1. இணையதள சந்தைப்படுத்துதல் (Website Marketing)
2. பே-பெர் கிளிக் அட்வடைசிங் (Pay-Per Click Advertising)
3. கன்டென்ட் மார்க்கெட்டிங் (Content Marketing)
4. இ-மெயில் மார்க்கெட்டிங் (E-mail Marketing)
5. சோசியல் மீடியா மார்க்கெட்டிங் (Social Media Marketing)
6. அப்ளியேட் மார்க்கெட்டிங் (Affiliate Marketing)
7. வீடியோ மார்க்கெட்டிங் (Video Marketing)
8. டெக்ஸ்ட் மெசேஜிங் (Text Messaging)
-ஆகியன ஆகும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நாளுக்குநாள் பல்வேறுவிதமான படிப்புகள் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அவற்றுள் சில -
1. Advanced Certificate in Digital Marketing and Communication
2. Advanced Certificate in Brand Communication Management
3. Attract and Engage Customers with Digital Marketing
4. Digital Marketing Accelerator Program
5. Digital Marketing Specialist
6. Digital Marketing Strategy and Planning
7. Digital Marketing Trends
8. Foundations of Digital Marketing and E-commerce
9. Google Digital Marketing & E-commerce
10. Introduction to Digital Marketing
11. Marketing in a Digital World
12. Master of Design in User Experience Design
13. Professional Certification in Digital Marketing
14. Search Engine Optimization (SEO) Course
15. The Strategy of Content Marketing
தேவையான திறமைகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் ஈடுபட விரும்புபவர்கள் கீழ்க்கண்ட திறமைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
* செர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன் (Search Engine Optimization) (SEO)
* கன்டென்ட் மார்க்கெட்டிங் (Content Marketing)
* டேட்டா அனாலடிக்ஸ் (Data Analytics)
* சோசியல் மீடியா மார்க்கெட்டிங் (Social Media Marketing)
* பே-பெர் கிளிக் அட்வர்டைசிங் (PPC (Pay-Per-Click) Advertising)
* இமெயில் மார்க்கெட்டிங் (Email Marketing)
* காப்பி ரைட்டிங் (Copywriting)
* வீடியோ மார்க்கெட்டிங் (Video Marketing)
* இன்புளுயன்சர் மார்க்கெட்டிங் (Influencer Marketing)
* மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன் (Marketing Automation)
* ஏ/பி டெஸ்ட்டிங் (A/B Testing)
* பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் (Project Management)
* மொபைல் மார்க்கெட்டிங் (Mobile Marketing)
* அடாப்டபிலிட்டி அன்ட் லேர்னிங் எஜிலிட்டி (Adaptability and Learning Agility)
* தகவல் தொடர்பு திறமைகள் (Communication Skills)
வேலைவாய்ப்புகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை படித்து முறையான சான்றிதழ் பெற்றவர்களுக்கும், அந்தத் துறையில் போதிய அனுபவமிக்கவர்களுக்கும் ஏராளமான உடனடி வேலைவாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக -
1. டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட் (Digital Marketing Specialist)
2. டிஜிட்டல் மார்க்கெட்டிங் அசோசியேட் (Digital Marketing Associate)
3. சோசியல் மீடியா ஸ்பெஷலிஸ்ட் (Social Media Specialist)
4. அட்வான்ஸ்டு வெப் அனாலிஸ்ட் (Advanced Web Analyst)
- போன்ற பதவிகளில் எளிதாக சேர்ந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தப் பதவிகளெல்லாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் சேருபவர்களுக்கு ஆரம்பத்தில் வழங்கப்படும் பதவிகளாகும். இந்தப் பதவிகளில் சிறப்பாக பணிபுரியபவர்களுக்கு அவர்களது தகுதியும், திறமையும் அடிப்படையாகக் கொண்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் மேனேஜர், டைரக்டர்; ஆப் மார்க்கெட்டிங், மார்க்கெட்டிங் (துணைத்தலைவர்) (VP of Marketing) போன்ற உயர்பதவிகளும் வழங்கப்படும்.
இவைதவிர - சோசியல் மீடியா மார்க்கெட்டர் (Social media marketer), SEO/SEM ஸ்பெஷலிட் (SEO/SEM Executive), டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் (Digital Marketing Executive), இ -மெயில் மார்க்கெட்டர் (Email marketer), கன்ட்ன்ட் மார்க்கெட்டர்; (Content marketer), மீடியா ஸ்பெஷலிட் (Media Specialist), டேட்டா அனலிஸ்ட் (Data analyst), பிராண்ட் மார்க்கெட்டிங் எக்ஸ்பர்ட் (Brand Marketing Expert) ஆகிய பணிவாய்ப்புகளும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் உள்ளன.
வணிக உரிமையாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், தொழில்முனைவோருக்கும், தங்களுடைய பொருட்களை உலக அளவில் அறிமுகப்படுத்த விரும்புபவர்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சான்றிதழ் படிப்புகள் மிகவும் உறுதுணையாக அமையும்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை முறையாக கற்றவர்களுக்கு இ-காமர்ஸ், ரீடைல், ஹெல்த்கர், ஹாஸ்பிட்டாலிட்டி, கல்வி மற்றும் தொழில்நுட்பம் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும், அமேசான், கூகுள், பேஸ்புக், லிங்டுஇன் போன்ற பல உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.