தஞ்சாவூர், ஜூலை 9: நாடு தழுவிய வேலைநிறுத்த விளக்க பிரச்சார கூட்டம் நேற்று தஞ்சையில் அனைத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சார கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது. தொமுச மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா, சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் ராஜன், ஹச் எம் எஸ் மாவட்ட செயலாளர் சின்னப்பன், யுடியூசி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் பேசினர். கூட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க கூடாது.
The post வேலைநிறுத்த விளக்க பிரச்சார கூட்டம் appeared first on Dinakaran.