வேலை வாய்ப்புகளை அதிகம் தரும் 'டிசைன்' படிப்புகள்: எங்கு படிக்கலாம்?

3 months ago 41

புத்தம் புதிய நவீன வடிவமைப்பு சம்பந்தப்பட்ட படிப்புகளை பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனம்தான் "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன்"(NATIONAL INSTITUTE OF DESIGN) என்னும் நிறுவனமாகும். இந்த கல்வி நிறுவனம் அகமதாபாத், காந்தி நகர், பெங்களுர், அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது.

பேச்சுலர் ஆப் டிசைன்  

பேச்சுலர் ஆப் டிசைன் (BACHELOR INSTITUTE OF DESIGN) என்னும் இந்தப் படிப்பு அகமதாபாத், ஆந்திரபிரதேசம், ஹயானா, மத்தியபிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்" என்னும் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிறது. இது 4 வருட படிப்பா கும். இந்தப் படிப்பில் சேர "டிசைன் ஆப்டிட்டியூட் டெஸ்ட்" (Design Aptitude Test) என்னும் நுழைவுத் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். இந்த நுழைவுத்தோ;வு -

1.முதல்நிலைத் தேர்வு (DAT - Preliminary Exam)

2.முதன்மைத் தேர்வு (DAT - Main Exam)

-ஆகிய இரு நிலைகளில் நடத்தப்படுகிறது.

இந்தப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் போட்டியாளர்களின் அறிவுத்திறன், தனித்திறன்கள், செயல்பாட்டுத்திறன் ஆகியவற்றை திறனாய்வு செய்யும் விதத்தில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

முதல்நிலைத்தேர்வில் சிறப்பாக எழுதி வெற்றிபெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட முதன்மைத் தேர்வு அனுமதிக்கப்படுவார்கள்.வரும் கல்வியாண்டில் 2025-2026 இந்தப்படிப்பில் சேர விரும்புபவர்கள் இப்போதே ஆன்லைன்மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 03.12.2024 ஆகும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 05.01.2025.

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 04.05.2025.

தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 10.06.2025க்குள் தேர்வு செய்யப்பட்ட விவரம் பற்றிய கடிதம் அனுப்பப்படும்.

1.நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டிசைன் - அகமதாபாத்

இங்கு நடத்தப்படும் பேச்சுலர் ஆப் டிசைன் என்னும் படிப்பில் -

I.கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN)

II.இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN)

III.டெக்ஸ்டைல் அப்பேரல் லைப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN)- ஆகிய சிறப்பு பாடப்பிரிவுகளில் பாடங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

I.கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN)

கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN) என்னும் பிரிவில் 4 சிறப்பு பாடங்களில் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது. அவை-

1. அனிமேஷன் பிலிம் டிசைன் (ANIMATION FILM DESIGN- B.Des )என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 19 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

2. எக்ஸிபிஷன் டிசைன் (EXHIBITION DESIGN- B.Des)) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 13 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

3.பிலிம் அண்ட் வீடியோ கம்யூனிகேஷன் (FILM AND VIDEO COMMUNICATION- (B.Des)) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 13 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

4. கிராபிக் டிசைன் (GRAPHIC DESIGN -B.Des) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 19 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

II. இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN)

இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN)என்னும் பிரிவில் 3 சிறப்பு பாடங்களில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. அவை-

1. செராமிக் அண்ட் கிளாஸ் டிசைன் (CERAMIC AND GLASS DESIGN- (B.Des)) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 13 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

2. பர்னிச்சர் அண்ட் இன்டீரியர் டிசைன் (FURNITURE AND INTERIOR DESIGN- (B.Des)) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 13 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

3. ப்ராடக்ட் டிசைன் (PRODUCT DESIGN- (B.Des)) என்னும் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 19 மாணவஇ மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

III. டெக்ஸ்டைல், அப்பேரல், லைப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN)

டெக்ஸ்டைல், அப்பேரல், லைஃப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN) பிரிவில் டெக்ஸ்டைல் டிசைன் (TEXTILE DESIGN-B.D.es)என்னும் சிறப்பு பாடத்தில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 19 மாணவ, மாணவிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

2.நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டிசைன் - ஆந்திரபிரதேசம்

இங்கு நடத்தப்படும் பேச்சுலர் ஆஃப் டிசைன் என்னும் படிப்பில் 3 சிறப்புப்பாடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN)என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். டெக்ஸ்டைல், அப்பேரல், லைஃப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

3.நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டிசைன் -ஹரியானா

(NATIONAL INSTITUTE OF DESIGN HARIYANA)

இங்கு நடத்தப்படும் பேச்சுலர் ஆப் டிசைன் என்னும் படிப்பில் 3 சிறப்புப்பாடங்களில் பயிறசிகள் வழங்ப்படுகின்றன.கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN)என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். டெக்ஸ்டைல், அப்பேரல், லைப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4.நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டிசைன் -மத்தியபிரதேசம்

(NATIONAL INSTITUTE OF DESIGN MADHYA PRADESH)

இங்கு நடத்தப்படும் பேச்சுலர் ஆப் டிசைன் என்னும் படிப்பில் 3 சிறப்புப்பாடங்களில் பயிறசிகள் வழங்கப்படுகின்றன. கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN)என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். டெக்ஸ்டைல், அப்பேரல், லைப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

5.நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டிசைன் -அஸ்ஸாம்

(NATIONAL INSTITUTE OF DESIGN ASSAM)

இங்கு நடத்தப்படும் பேச்சுலர் ஆப் டிசைன் என்னும் படிப்பில் 3 சிறப்புப்பாடங்களில் பயிறசிகள் வழங்ப்படுகின்றன.கம்யூனிகேஷன் டிசைன் (COMMUNICATION DESIGN)என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இண்டஸ்ட்ரியல் டிசைன் (INDUSTRIAL DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். டெக்ஸ்டைல்,அப்பேரல், லைப் ஸ்டைல் அண்ட் அக்சஸரி டிசைன் (TEXTILE, APPREL, LIFESTYLE AND ACCESSORY DESIGN) என்னும் படிப்பில் 25 மாணவ-மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

கல்வித்தகுதி

பேச்சுலர் ஆப் டிசைன் என்னும் படிப்பில் சேர விரும்புபவர்கள் அறிவியல் (Science), கலை (Arts), வணிகவியல் (Commerce), சமூகவியல் (Humanities) ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்றி பெற்றிருக்க வேண்டும். 2024-2025 கல்வியாண்டில் பிளஸ் 2 படிப்பவர்களும் இந்தப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுத இப்பொழுதே விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்புகள்

பேச்சுலர் ஆப் டிசைன் என்னும் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு மைக்ரோசாப்ட், விப்ரோ, டிரைடண்ட் குரூப், டிசிஎஸ், டொஷிபா, டைடன் இன்டஸ்ட்ரீஸ், பிலிப்ஸ், வேர்ல்பூல் இந்தியா, காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன் போன்ற பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் இந்தப் படிப்பில் வெற்றி பெற்றவர்கள் மிக அதிக சம்பளத்துடன் வேலைபார்க்கும் வாய்ப்புகளும் உள்ளன.

பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE COURSES)

மாஸ்டர் ஆப் டிசைன் (MASTER OF DESIGN) என்னும் பட்ட மேற்படிப்பு 19 சிறப்பு பாடங்களில் நடத்தப்படுகிறது. இது இரண்டரை வருட படிப்பாகும். இந்தப் படிப்பு அகமதாபாத், பெங்களூர், காந்திநகர் ஆகிய இடங்களில் இயங்கும் "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டிசைன்" என்னும் நிறுவனங்களில் நடத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு -

National Institute of Design

Paldi, Ahmedabad - 380 007.

email:[email protected]

NID Main Website: www.nid.edu

 Official Admission Website: https//admissions.nid.edu



Read Entire Article