வேலூர் முள்ளிப்பாளையத்தில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

3 hours ago 2

*போலீசார் சமரசம்

வேலூர் : வேலூர் முள்ளிப்பாளையத்தில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ேநற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரசம் செய்தனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டில் உள்ள முள்ளிப்பாளையம் வீராசாமி தெரு 1, 2, 3 மற்றும் பாறைமேடு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் சரிவர குடிநீர் விநியோகம் செய்வதில்லையாம். மேலும் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகளும் இல்லை எனக்கூறப்படுகிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அவ்வப்போது தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஒவ்வொரு முறையும் மழையின்போது வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழைநீர் புகுந்துவிடுவதால் மக்கள் பெரும் சிரமமடைந்து வருவதாகவும், இதனால் பலருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே அடிப்படை வசதிகோரி நேற்று 50க்கும் மேற்பட்டோர் பழைய பெங்களூரு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வடக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நாளை(இன்று) அடிப்படை வசதி தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

The post வேலூர் முள்ளிப்பாளையத்தில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article