வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி செல்லும் சாலையில் உள்ள ராஜபாளையம் கிராமம் அருகே உள்ள விவசாய

4 hours ago 3

 

வேலூர்: வேலூரில் தொழிலாளி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா(30), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலூரில் இருந்து கொணவட்டம் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சேண்பாக்கம் சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே வந்த சேண்பாக்கத்தை சேர்ந்த காமேஸ்வரன்(25) என்பவர், முஸ்தபாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டாராம். மேலும் ஆத்திரமடைந்தவர், முஸ்தபாவை சரமாரி தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முஸ்தபா வேலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி செல்லும் சாலையில் உள்ள ராஜபாளையம் கிராமம் அருகே உள்ள விவசாய appeared first on Dinakaran.

Read Entire Article