வேலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது

1 month ago 8

 

வேலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் காய்ச்சல் மருத்துவ சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, வைரஸ் போன்ற காய்ச்சல் பரவக்கூடிய நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாநகராட்சி அளவில் இளநிலை பூச்சியியல் வல்லுநர், பொது சுகாதார மேலாளர் மற்றும் 15 சுகாதார ஆய்வாளர்கள் 4 மண்டலங்களிலும் தீவிர டெங்கு காய்ச்சல் மற்றும் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட அளவில் 521 கொசு ஒழிப்பு பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார். வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் 21 கிராம பகுதிகள், 2 நகராட்சி பகுதிகள் மற்றும் 3 மாநகராட்சி பகுதிகள் என 24 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நாள்தோறும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கணியம்பாடி ஒன்றியம் அடுக்கம்பாறை, ெநல்வாய், கம்மசமுத்திரம், வேலூர் ஒன்றியத்தில் பெருமுகை, சதுப்பேரி, பெரிய சேக்கனூர், ஒடுகத்தூரில் முகமதுபுரம், ஆசனாம்பட்டு, செதுவாலை, திருவலத்தில் குப்பத்தாமேட்டூர், வஞ்சூர், கோக்கேரி, வடுகன்தாங்கலில் வேப்பனேரி, சென்றாயன்பள்ளி, கள்ளப்பாடி பகுதியில் 3 இடங்களிலும், மேல்பட்டியில் 3 இடங்களில், வேலூர் மாநகராட்சியில் காட்பாடி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, கொசப்பேட்டை ஈவெரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்என்.பாளையம் அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 24 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

The post வேலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article