வேலூர், மார்ச் 14: கோடை தொக்கம் தொடங்கியதால் வேலூரில் 101.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் ஏரிகள், குளங்கள் எல்லாம் வறண்டு உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சரியாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மார்ச் மாதம் தொடக்கத்திலேயே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேலாக கொளுத்தி வருகிறது. இருப்பினும் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் 100.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
அதை தொடர்ந்து மீண்டும் வெயிலின் தாக்கம் 100டிகிரிக்குள் குறைந்தது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் லேசான மழை பெய்தது. இதனால் 12ம் தேதி 90.7 டிகிரியாக பதிவாகியது. நேற்று முன்தினம் 95.5 டிகிரியாகவும், நேற்று 101.4 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். தொடக்கமே 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி உள்ளதால் வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்போதையே பொதுமக்கள் வெயிலை எப்படி சமாளிப்பது என்று கவலை அடைந்துள்ளனர்.
The post வேலூரில் 101.4 டிகிரி வெயில் கொளுத்தியது கோடை தாக்கம் தொடங்கியது appeared first on Dinakaran.